InterviewSolution
| 1. |
Polythene bags and cover effects in tamil |
|
Answer» ் பை என்பது நெகிழி என்ற பல்லுறுப்பியால் உருவாக்கப்பட்ட பை ஆகும். இது பெரும்பாலும் பின்னப்படாமல், மெல்லிய காகிதம் அல்லது துணி போல, வெப்பத்தால் உருக்கி ஒட்டப்பட்டு உருவாக்கப்படும். குறைவாகவே பின்னப்பட்டு உருவாக்கப்படுகின்றன. பசை போன்ற ஒட்டும் தன்மையுள்ள பொருளாலும், இப்பைகள் ஒட்டுவதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. எடை குறைவாக இருப்பதாலும், சூழ்நிலை மாற்றம் எந்த வித தாக்கத்தையும், இவற்றின் மேல் ஏற்படுத்த முடியாதத் தன்மையைப் பெற்றிருப்பதாலும், விலை குறைவாக இருப்பதாலும், பராமரிப்பு எளிமையாலும், இவை வணிகத்தில் சரக்குப் போக்குவரத்துக்கு அதிக அளவில் பயன்படுகின்றன.வகைகள்பல்வேறு வகையான அளவுகளிலும், சிறப்புத் தன்மைகளுடனும் நெகிழிப்பைகள் உள்ளன. பொதுவாக, தனிநபர் பயன்பாட்டு அடிப்படையிலும், வியாபார அடிப்படையிலும், இவற்றை இரு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். அட்டைப்பெட்டி, மரப்பெட்டி, தகரப் பெட்டி போன்ற பல்வேறு பொட்டலமிடுதல், சிப்பமிடுதல் முறைகளை விட, இப்பைகளினால் குறைந்த அளவினைக் கொண்டு அல்லது மிகக் குறைவான அளவுப் பொருட்களைக் கொண்டு சிறப்பாகவும், பாதுகாப்பாகவும், பொருள் ஓரிடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப் படுகின்றது. |
|