ப்ரண்ட்லண்ட் அறிக்கை ஆனது மனிதர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்கள் முதலியனவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தது.
இதில் இயற்கை வளங்களை மீண்டும் பகிர்ந்து அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி அனைவருக்கும் தங்கள் அடிப்படைத் தேவைகளை பெற ஊக்குவிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
இது பேணத் தகுந்த மேம்பாட்டிற்கான 3 முக்கிய கூறுகளான சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் சமூகம் முதலியவற்றினை அடிக்கோட்டுக் காட்டியது.
இவை பின்னர் மூன்றடிக் கோவைகள் என அழைக்கப்பட்டன.