Answer» புதை படிவ எரிபொருட்களை பாதுகாப்பதன் காரணம் புதை படிவ எரிபொருட்கள் - புவியின் மேல் அடுக்கினுள் புதை படிவ எரிபொருட்கள் காணப்படுகின்றன.
- பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து மடிந்த உயிரினங்கள் காற்றில்லா சூழலில் மட்குதல் உள்ளிட்ட இயற்கை நிகழ்வுகளின் காரணமாக புதை படிவ எரிபொருட்கள் உருவாகின.
- புதை படிவ எரிபொருட்களுக்கு உதாரணமாக பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் இயற்கை வாயு முதலியனவற்றினை கூறலாம்.
புதை படிவ எரிபொருட்களை பாதுகாப்பதன் காரணம் - தொடர்ந்து அதிகமாக புதை படிவ எரிபொருட்களை பயன்படுத்தினால் மிக விரைவாக தீர்ந்து போகக்கூடிய நிலை ஏற்படும்.
- புதை படிவ எரிபொருட்கள் உருவாக நீண்ட காலம் தேவைப்படும்.
- எனவே நாம் புதை படிவ எரிபொருட்களை பாதுகாக்க வேண்டும்.
|