1.

Short essay writing for ulavin sirappu in tamil

Answer»

ANSWER:

அகர முதல

அகர முதல

தாங்கள் பார்ப்பது :முகப்பு »கட்டுரை »உழவுக்கு வந்தனம் செய்வோம் – கெ.செல்லத்தாய்

உழவுக்கு வந்தனம் செய்வோம் – கெ.செல்லத்தாய்இலக்குவனார் திருவள்ளுவன் 21 திசம்பர் 2014 கருத்திற்காக..

uzhavu-agrio6

உழவுக்கு வந்தனம் செய்வோம்!

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் மனிதனுக்கு மிகவும் தேவை. இவை அனைத்தும் விவசாயத்தின் அடிப்படையில் பெற வேண்டும். உணவு இல்லையென்றால் மனிதனால் உயிர்வாழ முடியாது. உழவன் ‘சேற்றில் கால்வைத்தால்தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும்’.’தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு’ என உழவின் மாண்பைத் திருவள்ளுவர் கூறுகிறார். இன்றைக்கு உழவின் நிலை என்ன?

உழவு அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணமும் மனிதர்களாகிய நாம்தானே. மனிதனின் உயிர்மூச்சாக இருந்தது உழவு.

uzhavu-agrio5uzhavu-agrio4

அரசுவேலை வேண்டா :

உழவோடு பின்னிப்பிணைந்து வாழ்ந்து வந்தவர்கள் நம் முந்தைய தலைமுறையினர். 50, 60ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அரசாங்க வேலை கிடைத்தாலும் போகவிட மாட்டார்கள்.’சாமி சண்டைக்காரனாப் போனாலும், பூமி என்றுமே நம்மைக் கைவிடாது’ என்ற நம்பிக்கையில் வாழ்ந்தனர். ‘நம்ம வீட்டில் நாலு பேருக்கு வேலைக்கு இருக்கும்போது, நீ அரசாங்கத்துக்கு வேலை பார்க்கப் போகிறாயா? நம்ம வேலையை(உழவுத்தொழிலை)ப் பாருடா, நாலுகாசு சம்பாதிக்கலாம்,’ என்று வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது என்றே சொல்லலாம். பணத்தைவிட நல்ல மனத்தைச் சம்பாதித்தவர்கள் வேளாண் பெருமக்கள். அதனால்தான் மாதம் மும்மாரி பெய்தது என்றுகூடச் சொல்லலாம். இன்றைய பிள்ளைகளிடம் உழவு பற்றிக் கேட்டால், ‘அது எந்தக் கடையில் விற்கிறது?’ என்று கேட்கும் சூழ்நிலையில் உள்ளனர். எங்கள் தாத்தாவிடம் உழவுபற்றிக் கேட்டால் போதும், பேசத் தொடங்கிவிடுவார். அதில் ஒரு சிறுதுளிதான் நான் சொல்லப்போவது.

uzhavu-agrio1

ஐந்து மன்னனுக்குச் சமம்:

‘அணில் தாவா ஆயிரம் தென்னை உடையோன் ஐந்து மன்னனுக்குச் சமம்’. அது எப்படி என்று கேட்டால் ‘ஆயிரம் தென்னை மரம் வைத்திருக்கும் உழவனின் சொத்து, ஐந்து மன்னர்கள் வைத்திருக்கும் சொத்திற்குச் சமமானது’. ‘ஒரு தென்னைக்கும் மற்றொரு தென்னைக்கும் அணில் தாவ முடியாத அளவிற்கு இடைவெளி விட்டு நட வேண்டும்’ என்பது இதன் கருத்து. மேலும் ‘நண்டு ஓட நெல் நட வேண்டும். நரி ஓட கரும்பு நட வேண்டும்; வண்டி ஓட வாழை நட வேண்டும்; தேர் ஓட தென்னை நட வேண்டும்’ என்பதும் பட்டறிவு வாய்ந்த உழவன் சொன்னதுதான். அவர்களுக்குச் சென்டி மீட்டர் கணக்கெல்லாம் தெரியாது. இரண்டுசிறுகோல்(சென்டிமீட்டர்) இடைவெளி விட்டுப் பயிர் நடவேண்டும் என்று சொல்வது உழவர்களுக்குப் புரியாத ஒன்று. நண்டு ஓடி வருமளவிற்கு uzhavu-agrio3இடைவெளி விட்டு நெல் நட வேண்டும். நரி ஓடி வருமளவிற்கு இடைவெளி விட்டுக் கரும்பு நட வேண்டும். (மாட்டு) வண்டி போய் வருமளவிற்கு இடைவெளி விட்டு வாழை நட வேண்டும். தேர் போய் வருமளவு இடைவெளி விட்டுத் தென்னை நட வேண்டும். அப்படியெனில் ஆயிரம் தென்னை மரங்கள் நட எத்தனைக் காணி(ஏக்கர்) நிலம் வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும். ‘கைபடாத குழந்தையும், கால்படாத பூமியும் வளர்ச்சி பெறாது’ என்பர். நாற்றங்கால் பயிர் என்பது என்ன? நாற்றுப் பாவுதல், தொழி கலக்குதல், பரம்படித்தல், வரப்பு மெழுகுதல், சூடடித்தல், வைக்கோல் படப்பு, மாகாணி, வீசம்படி, மரக்கால், கமலை இறைத்தல்



Discussion

No Comment Found