| 1. |
தாகைச் சொற்களை விரித்து எழுதுக. (எ.கா.) இருதிணை : உயர்திணை, அஃறிணைமுக்கனிமுத்தமிழ்நாற்றிசைஐவகைநிலம்அறுசுவை |
|
Answer» 4.11 தொகைச் சொற்களை விரித்து எழுதுதல் ஆசிரியர் பயிற்சி மாணவர்களே! ‘முத்தமிழ்’ இது ஒரு தொகைச் சொல். இதனைப் பிரித்தால், மூன்று + தமிழ் = முத்தமிழ் எனவாகும். இதனை விரித்தால் இயல், இசை, நாடகம் = முத்தமிழ் எனவாகும். இதுதான், பிரித்து எழுதுவதற்கும் விரித்து எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு. தொகைச் சொல்லை விரித்து உணரும்பொழுது மொழியறிவு பெருகும்; சொற்களஞ்சியமும் பெருகும். ஆதலால் தொகைச் சொல்லை விரித்து உணரும் பயிற்சியைப் பெருக்கிக்கொள்க. தொகை விரி1. இருதிணை-உயர்திணை; அஃறிணை அகத்திணை; புறத்திணை2. இரட்டைக் காப்பியம்-சிலப்பதிகாரம்; மணிமேகலை3. ஈரெச்சம்-பெயரெச்சம்; வினையெச்சம்4. முக்காலம்-இறப்பு - நிகழ்வு - எதிர்வு5. முக்கனி-மா, பலா, வாழை6. முத்தமிழ்-இயல்; இசை; நாடகம்7. மூவேந்தர்-சேர, சோழ, பாண்டியர்8. நாற்படை-தேர்ப்படை, யானைப் படை, குதிரைப் படை, காலாள் படை9. ஐம்புலன்-சுவை - ஒளி - ஊறு - ஓசை - நாற்றம்10. ஐம் பொறி-மெய், வாய், கண், மூக்கு, செவி11. அறு சுவை-இனிப்பு - கசப்பு - புளிப்பு - உவர்ப்பு கார்ப்பு - துவர்ப்பு12. அறு சமயம்-சைவம் - வைணவம் - காணாபத்யம் கௌமாரம் - சௌரம் - சாக்தம். |
|