InterviewSolution
| 1. |
தாவரத்தின் எடை அதிகரிப்பதற்கு நீர்மட்டுமே காரணம் என்பதை ஜோசப்பிரிஸ்ட்லி என்பவர் தனது சோதனை மூலம் விளக்கினார். |
|
Answer» ்கியம் தவறாகும் :ஜோசப் பிரிஸ்ட்லி சோதனை: ஜோசப் பிரிஸ்ட்லி சோதனையானது தாவரங்கள் உணவு உற்பத்தியினை செய்வதால் எடை அதிகரிக்கிறது. அவை கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை வெளியிட்டு ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன என்பது முடிவினால் தெரிய வந்தது. இவர் சோதனைக்காக புதினாவை பயன்படுத்தினார். ஜான் பாப்டிஸ்ட் வான் ஹெல்மாண்ட் சோதனை : ஜான் பாப்டிஸ்ட் வான் ஹெல்மாண்ட் சோதனையின் போது 2.3 கி.கி எடையுள்ள சிறிய வில்லோ மரத்தின் செடியினை ஒரு கலனில் தூசி புகாத அளவிற்கு 90.9 கி.கி அளவுள்ள மண்ணில் நடப்பட்டு ஐந்து வருடங்களாக நீர் ஊற்றப்பட்டு வளர்க்கப்பட்டது. ஐந்து வருடங்களுக்கு பிறகு சிறிய மரமாக வளர்ந்தது. அதன் தற்போதைய எடை 74.7 கி.கி ஆக உயர்ந்துள்ளது. ஆனால் மண்ணின் எடையானது 90.8 கி.கி ஆக உள்ளது. அதாவது 0.1 கி.கி அளவு மட்டுமே குறைந்து உள்ளது. எனவே ஒரு தாவரத்தின் எடை அதிகரிப்பதற்கு நீர் காரணம் என நிருபித்தார். |
|