Answer» தொழிலக அமைவிடத்தை நிர்ணயிக்கும் காரணிகள்மூலப்பொருட்களின் இருப்பு மற்றும் அதன் அருகாமை - மூலப்பொருட்கள் அதிகமாக மற்றும் விலை குறைவாக கிடைக்கும் இடங்களில் தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன.
எரிசக்தி - பழங்காலத்தில் தொழிற்சாலைகளை இயக்க நீராவி சக்தி பயன்படுத்தப் பட்டதால் நிலக்கரி சுரங்கங்களுக்கு அருகில் தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன.
போக்குவரத்து செலவு - தொழிற்சாலைகளின் போக்கு வரத்து செலவு என்பது மூலப் பொருட்களை தொழிற்சாலைக்கு கொண்டு வருவது மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வதற்கு ஆகும் செலவினை குறிப்பது ஆகும்.
சந்தைக்கு அருகாமை - சந்தைக்கு அருகில் தொழிற்சாலைகளை வைப்பதன் மூலம் விரைவாக உற்பத்தியான பொருட்களை சந்தைப் பொருட்களாக மாற்ற இயலும்.
- மேலும் தொழிலாளர்கள், அரசாங்க கொள்கை மற்றும் மூலதனம் முதலியன காரணிகளும் தொழிலக அமைவிடத்தினை நிர்ணயிக்கிறது.
|