1.

தீனிப்பை, அரைவைப்பை, மற்றும் காற்றுஅறைகள் காணப்படுவது?(அ) மீன் (ஆ) தவளை(இ) பறவை (ஈ) வௌவால்

Answer»

ை , அரைவைப்பை , மற்றும் காற்று அறைகள் காணப்படுவதுபறவைக‌ள் பறப்பன வகுப்பைச் சேர்ந்தவைகள், முதுகெலும்பிகளில் முதல் வெப்ப இரத்த (மாறா வெப்ப நிலை) (HOMEOTHERMIC) உயிரிகள் ஆகும்.  இவைகள் கதிர் வடிவம் கொண்டவைகள். மேலும் இவற்றின்  உடலானது தலை கழுத்து, உடல் மற்றும் வால் என நான்கு பகுதிகளைக் கொண்டது.  இவைகளில் தோல் சுரப்பிகள் காணப்படுவதில்லை. ஈரிணைக் கால்கள் உள்ளன. இதில் முன்னங்கால்கள் இறக்கைகளாகின்றன. பின்னங்காள்கள் நடப்பதற்கும் ஓடுவதற்கும் ஏற்றவாறு வடிவமைப்பை பெற்றுள்ளன.உணவுக்குழலில் தீனிப்பை மற்றும் அரைவைப்பை உள்ளது. இவற்றின் எலும்புகள் மென்மையாக இருக்கும். எலும்புகளில் காற்றறைகள் காணப்படுகின்றன.இவைகள் காற்றெலும்புகள் என அழைக்கப்படுகின்றன.



Discussion

No Comment Found