திருக்குறளில் விருந்தோம்பல் அதிகாரம் இடம்பெற்றுள்ள இயல் ?
Answer»
இல்லறவியல்:
திருக்குறளில் விருந்தோம்பல் அதிகாரம் இடம்பெற்றுள்ள இயல் இல்லறவியல் ஆகும்.
உலகப் பொது மறையாக போற்றப்படும் திருக்குறளில் அதை இயற்றிய திருவள்ளுவர் வரும் விருந்தினரை உபசரிக்கும் பண்பு, நலன்களை பற்றி அதற்கென தனியாக ஒரு இயலில் விருந்தோம்பல் என்ற ஒரு தலைப்பை ஒதுக்கிகீ கூறியிருக்கின்றார்.
எனவே நம் முன்னோர்கள் விருந்தினர்களை உபசரிக்கும் விஷயத்தில் எந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறார்கள் என்பதை இதுபோன்ற நூல்களின் மூலமாக நம்மால் உணர முடிகின்றது.
இன்று காணாமல் போன இந்த உபசரிப்பு நிகழ்வுகள் பழம்பெரும் காலத்தில் பெருமளவில் போற்றத்தக்க ஒன்றாக இருந்தது என்பதை இந்நூல்கள் எல்லாம் நமக்கு கற்றுக் கொடுக்கின்றது.
இந்த வரிசையில் விருந்தினர்களை நாம் எவ்வாறு உபசரிக்க வேண்டும்.
அவர்களிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி வள்ளுவர் இல்லறவியல் என்பதில் இதை பற்றி பத்து குறட்பாக்களை இயற்றி இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது.