InterviewSolution
| 1. |
திரவத்தம்பத்தினால் ஏற்படும் அழுத்தம் பற்றி விளக்குக. |
|
Answer» ம்பத்தினால் ஏற்படும் அழுத்தம்:ஒரு உயரமான கொள்கலனில் திரவம் நிரப்பப்படுகிறது. அது ஒரு திரவத்தம்பத்தை அதனுள் ஏற்படுத்தும். அதன் குறுக்கு வெட்டுப்பரப்பளவு 'A' திரவத்தின் அடர்த்தி 'P' மற்றும் திரவத்தின் உயரம் 'H' என்க.(திரவத்தம்பத்தின் மேற்பரப்பிலிருந்து திரவத்தின் ஆழம் 'h' எனலாம்) திரவத்தம்பத்தின் அடிப்பகுதியிலுள்ள உந்துவிசை (F)= திரவத்தின் எடை F = MG ___(1)திரவத்தின் நிறையானது திரவத்தின் பருமனை அதன் அடர்த்தியால் பெருக்கினால் கிடைக்கும். நிறை m = pV ___(2) திரவத்தின் பருமன், (V) = குறுக்கு வெட்டுப்பரப்பளவு (A) X உயரம் (h) V = Ah ____(3)சமன்பாடு 3-ஐ 2-ல் பிரதியிட, m=pAh ___(4)அழுத்தம் P = உந்து விசை (F) /பரப்பளவு (A) = mg/ A = pAhg/ A = phg திரவத்தினால் ஏற்படும் அழுத்தம் P = phg ஆகும். எனவே திரவத்தம்பத்திலுள்ள அழுத்தமானது அத்திரவத்தின் ஆழம், அடர்த்தி மற்றும் புவியீர்ப்பு விசை ஆகியவற்றால் நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஆழத்தில் திரவத்தின் அழுத்தமானது, அந்த திரவத்தினைக் கொண்டுள்ள கொள்கலனின் வடிவத்தையோ, அதிலுள்ள திரவத்தின் அளவையோ பொருத்தது அல்ல, ஆழத்தை மட்டுமே பொறுத்தது. கொள்கலன்கள் வெவ்வேறு வடிவத்தில் வெவ்வேறு அளவு திரவத்தைக் கொண்டிருந்தாலும் அழுத்தமானது சமமாகவே உள்ளது. |
|