1.

தமிழ் நாட்டில் நடந்த சமூக சீர்திருத்த இயக்கங்களை எடுத்துக்காட்டுக

Answer»

தமிழ்நாடு பிரித்தானிய ஆட்சிக்கு உட்பட்டிருந்த போது சமூக, பொருளாதார, அரசியல் நோக்கில் அது மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு ஆட்சிப்பகுதியாக இருந்தது. சாதி அமைப்பின் படி அனேக தமிழர்கள் சூத்திரர்களாக கருதப்பட்டார்கள். பெண்கள் தமது உரிமைகளை நிலை நிறுத்த முடியாமல் கல்வி, வேலை வாய்ப்புக்கள் இன்றி அடக்கப்பட்டு இருந்தார்கள். சமூகத்தின் மீது மூடநம்பிக்கைகளும் சமயமும் இறுகிய பிடியைக் கொண்டிருந்தது. கல்வியை சிறுபான்மையினர் மட்டுமே பெற்றிருந்தனர். பெரும்பானமையானோர் கிராமத்தில் வேளாண்மையே பிரதானமாக நம்பி இருந்தார்கள். இந்தியாவின் அரசியல் மையம் வட நாட்டிலிலேயே இருந்தது. பாரதியின் பாட்டுக்களில் இத்தகைய நிலைகளில் பலவற்றை அவன் விபரித்து பாடியிருக்கிறான். இத்தகைய சூழலில்தான் தமிழில்நாட்டில் சீர்திருத்தங்கள் பல தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அத்தகைய அரசியல்ல் தலைவர்களில் பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோர் முக்கியமானவர்கள். இதக் கட்டுரை தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட, தொடர்ந்து முன்னெடுக்கப்படும் சீர்திருத்தங்களை விபரித்து மதிப்பிடும்.



Discussion

No Comment Found

Related InterviewSolutions