InterviewSolution
| 1. |
தட்டைப் புழுக்கள் மற்றும் உருளைப்புழுக்கள் இடையேயான வேறுபாட்டினைக்கூறுக. |
|
Answer» புழுக்கள் மற்றும் உருளைப் புழுக்கள் இடையேயான வேறுபாடுதட்டைப்புழுக்கள்பிளாட்டிஹெல்மின்தஸ் தொகுதியில் தட்டைப்புழுக்கள் உள்ளன.உணவுப்பாதை இல்லை அல்லது எளிமையானது. கழிவு நீக்கமும் ஊடு கலப்பு ஒழுங்குப்பாடும் சுடர் செல்களால் நடைபெறும். இவ்வகை புழுக்கள் பெரும்பாலும் இருபாலின அதாவது ஒரே புழுவில் ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருக்கும். இவை பொதுவாக ஒட்டுண்ணிப்புழுக்கள் ஆகும். உருளைப் புழுக்கள் உருளைப்புழுக்கள் நிமட்டோடா தொகுதியைச் சேர்ந்தவை. உருளைப் புழுக்களின் உடல் குறுகியும், இரு முனைகளும் கூர்மையாகவும் உள்ளன.இத்தொகுதியில் 25000 வகை உருளைப்புழுக்கள் காணப்படுகின்றன. இவற்றில் பாதி வகை உருளைப்புழுக்கள் ஓட்டுண்ணி வகையைச் சார்ந்தவை ஆகும்.உடலில் கண்டங்கள் காணப்படுவது இல்லை.கியூட்டிகிள் என்னும் மெல்லிய உறை உடலின் மேற்புறத்தில் காணப்படுகிறது.இவை பொய்யான உடற்குழி கொண்டவை. உணவுக்குழல் ஓர் நீண்ட குழாய் அமைப்புடையது.ஆண், பெண் என உயிரிகள் தனித்தனியே காணப்படுகின்றன. இவற்றில் பல வகைகள் மண்ணில் தனித்து வாழ்பவை. |
|