Answer» தண்டுசைலம் - சைலம் மற்றும் புளோயம் என்ற இரு கடத்து திசுக்கள் வாஸ்குலார் திசுத் தொகுப்பில் அமைந்து உள்ளன.
- நீர் மற்றும் கனிமங்களை தாவரத்தின் அனைத்து உறுப்புகளுக்கும் கடத்தும் பணியில் சைலம் ஈடுபடுகிறது.
- புரோட்டோ சைலம் மற்றும் மெட்டா சைலத்தின் அமைவிடத்தினை பொறுத்து சைலம் இரு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
உள் நோக்கிய சைலம் (எண்டார்க்) - உள் நோக்கிய சைலம் என்பது மையத்தினை நோக்கி புரோட்டோ சைலமும், வெளிப் புறத்தினை நோக்கி மெட்டா சைலமும் அமைந்திருப்பது ஆகும்.
- (எ.கா) தண்டு.
வெளிநோக்கிய சைலம் (எக்ஸார்க்) - வெளி நோக்கிய சைலம் என்பது மையத்தினை நோக்கி மெட்டா சைலமும், வெளிப் புறத்தினை நோக்கி புரோட்டோ சைலமும் அமைந்திருப்பது ஆகும்.
- (எ.கா) வேர்.
|