Answer» உலர்ந்த தாவரப் பொருளை நீரில் வைக்கும் போது உப்பி விடுவதற்கான காரணம் - உள் ஈர்த்தல் என்ற நிகழ்ச்சியே உலர்ந்த தாவரப் பொருளை நீரில் வைக்கும் போது உப்பி விடுவதற்கான காரணம் ஆகும்.
- உள் ஈர்த்தல் என்பது உயிர் உலர்ந்த தாவரப் பொருட்கள் நீரில் வைக்கப்படும் போது அவை நீரினை உறிஞ்சி உப்புகின்ற நிகழ்ச்சி என அழைக்கப்படுகிறது.
உள் ஈர்த்தல் நிகழ்விற்கான உதாரணம் - உலர் விதைகள் மற்றும் உலர் திராட்சையினை நீரில் வைக்கும் போது அவை நீரினை உறிஞ்சி உப்பி விடுகின்றன.
- ஆனால் அவை நீரில் கரைவது கிடையாது.
- முளைத்தல் விதைகளில் உள் ஈர்த்தல் என்ற நிகழ்ச்சி நடைபெறுவதன் காரணமாக இளம் நாற்றுக்கள் விதைகளில் இருந்து வெளி வருகின்றன.
|