|
Answer» உணர்வுப் பகுப்பாய்வு - ஓர் எழுத்தையோ, கலைப் படைப்பையோ அல்லது வணிகப் பொருளைப் பற்றிய கருத்துகளையோ தீர்மானிப்பது உணர்வுப் பகுப்பாய்வு என அழைக்கப்படும். ஒரு கருத்து பற்றிய நம் சிந்தனை நேர்மறை, எதிர்மறை அல்லது நடுநிலைத் தன்மை உடையதாக இருக்கும். இவற்றை கணிக்க உணர்வுப் பகுப்பாய்வு பயன்படுகிறது. கோபம், சோகம், மகிழ்ச்சி போன்றவை உயர்நிலை உணர்வுப் பகுப்பாய்வின் மூலம் செய்ய இயலும். ஒரு படத்தினை பார்த்தவர் அந்த படம் பற்றிய தங்களின் விமர்சனத்தினை சமூக ஊடகங்களில் வெளியிடுகின்றனர். இதனை உணர்வப் பகுப்பாய்வு செய்தால் படத்தின் உண்மைக் கருவினை நாம் அறியலாம். உணர்வுப் பகுப்பாய்வு ஆனது ஆடை அலங்காரம், நுகர்பொருட்கள், வணிகப் பொருட்கள் முதலியனவற்றிலும் பயன்படுகிறது.
|