சங்க காலத்திலே வாழ்ந்து வந்த நம் பழம்பெரும் தமிழர்கள்; அது அரசனாக இருந்தாலும் சரி, சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி, வந்த விருந்தினர்களை வரவேற்று உபசரித்து போற்றி வந்தனர்.
ஆனால் கால மாற்றத்தின் காரணமாக புதியவர்களை வீட்டிற்கு அழைத்து உணவு உபகாரம் செய்வது என்பது குறைந்துவிட்டது.
இன்றைய சூழலில் விருந்தோம்பல் என்றால் தன்னுடைய உறவினர்களை மட்டுமே வரவழைத்து உபகாரம் செய்வது என்று எண்ணிக் கொண்டனர்.
ஆனால் இதுவும் கூட குறைவு என்றே சொல்லியாக வேண்டும்.
காரணம் அவரிடம் குறைந்துவிட்ட மனித நேயம் மட்டுமே.
அதுபோல விருந்து பரப்பது குறைந்ததன் காரணமாக நாயக்கர், மராத்தியர் ஆட்சி காலத்தின் பொழுது அதிக அளவிலான சத்திரங்களும் அவர்களுக்காக, வழிப்போக்கர்களுக்காக கட்டப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.