1.

வேறுபடுத்துக :அ. உடல செல் ஜீன் சிகிச்சை மற்றும் இன செல்ஜீன் சிகிச்சை

Answer»

உட‌ல்  செல் ஜீன் சிகிச்சை மற்றும் இன செல் ஜீன் சிகிச்சை இடையேயான வேறுபாடுக‌ள்  

உட‌ல் செல் ‌ஜீ‌ன்  சிகிச்சை

  • உட‌ல் செல் ஜீ‌ன் சிகிச்சை முறை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்கு‌ம் மரபு அணு‌க்களானது உட‌‌லி‌ல் உ‌ள்ள உட‌ற்செ‌ல்களு‌க்கு‌ள் மா‌ற்ற‌ப்படு‌கிறது.
  • இ‌ந்த வகை‌ ‌சி‌கி‌ச்சை முறை‌யி‌ல் மரபணு‌க்க‌ள் நமது உட‌லி‌ல் எலு‌ம்பு ம‌ஜ்ஜை செ‌ல்க‌ள், இர‌த்த செ‌ல்க‌ள், தோ‌ல் செ‌ல்க‌ள் முத‌லிய உட‌ற்செ‌ல்களு‌க்கு‌ள் செலு‌த்த‌ப்படு‌‌கிறது.
  • உட‌ல் செல் ஜீ‌ன் சிகிச்சை‌யி‌ல் செலு‌த்த‌ப்ப‌ட்ட ஜீ‌ன்க‌ள் அடு‌த்த தலைமுறை‌க்கு கட‌த்த‌ப்படுவது ‌கிடையாது.

 இனச்செல் ஜீ‌ன்  சிகிச்சை

  • இனச்செல் ஜீ‌ன் சிகிச்சை முறை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்கு‌ம் மரபு அணு‌க்களானது உட‌‌லி‌ல் உ‌ள்ள இன‌ச்செ‌ல்களு‌க்கு‌ள் மா‌ற்ற‌ப்படு‌கிறது.  
  • இ‌ந்த வகை‌ ‌சி‌கி‌ச்சை முறை‌யி‌ல் ஜீ‌ன்கள் நமது உட‌லி‌ல் அ‌ண்ட‌ச் செ‌ல்க‌ள், ‌வி‌ந்து‌ச் செ‌ல்க‌ள் முத‌லிய இன‌ச்செல்களு‌க்கு‌ள் செலு‌த்த‌ப்படு‌‌கிறது.
  • இனச்செல் ஜீ‌ன் சிகிச்சை‌யி‌ல் செலு‌த்த‌ப்ப‌ட்ட ஜீ‌ன்கள் அடு‌த்த தலைமுறை‌க்கு கட‌த்த‌ப்படுவது ‌உ‌ண்டு.  


Discussion

No Comment Found