InterviewSolution
| 1. |
வேதிவினைகளில் எலக்ட்ரான்களை ஏற்றுஎதிர் அயனியாக மாறக்கூடிய தனிமம்அ. பொட்டாசியம் ஆ. கால்சியம்இ. புளூரின் ஈ. இரும்பு |
|
Answer» ின்:வேதிப்பிணைப்பு ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களை ஒன்றாக சேர்த்து பிணைத்து வைக்கும் கவர்ச்சி விசையே வேதிப்பிணைப்பு ஆகும். அயனிப்பிணைப்பு எதிரெதிர் மின்சுமையினை உடைய இரு அயனிகளுக்கு இடையே உருவாகும் கவர்ச்சி விசையானது அயனிகளை பிணைக்கின்றன. இவை அயனிப்பிணைப்பு என அழைக்கப்படும். அயனிகள் எலக்ட்ரானை இழக்கும் அணுவானது நேர்மின் அயனியாகவும், எலக்ட்ரானை ஏற்கும் அணுவானது எதிர்மின் அயனியாகவும் மாறுகின்றன. புளூரின் அணுபுளூரின் அணுவின் அணு எண் 9 ஆகும். இந்த அணுவின் இணைத்திறன் கூட்டில் உள்ள எலக்ட்ரான் அமைப்பு 2,7 ஆகும். இந்த அணுவானது நிலைப்புத் தன்மை பெற ஒரு எலக்ட்ரான் தேவை. எனவே இது ஒரு எலக்ட்ரானை ஏற்று எதிர்மின் அயனியாக மாறும். |
|