InterviewSolution
| 1. |
வெளிக்கூட்டில் எட்டு எலக்ட்ரான்களுடன்நிலைத்த எலக்ட்ரான் அமைப்பைப் பெற்ற தனிமங்கள்அ. ஹாலோஜன்கள் ஆ. உலோகங்கள்இ. மந்த வாயுக்கள் ஈ. அலோகங்கள் |
|
Answer» யுக்கள்வெளிக்கூட்டில் எட்டு எலக்ட்ரான்களுடன் நிலைத்த எலக்ட்ரான் அமைப்பை பெற்ற தனிமங்கள் மந்த வாயுக்கள். மந்த வாயுக்கள் தவிர மற்ற தனிம அணுக்கள் முழுவதும் நிரப்பப்படாத இணைதிறன் கூட்டைப் பெற்றிருக்கின்றன. ஒரு அணு அதன் இணைதிறன் எலக்ட்ரான்களை இழந்து அல்லது பங்கீடு செய்து இணைவதன் மூலம் நிலையான மந்த வாயுக்களின் எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகின்றன. கோசல் மற்றும் லூயிஸ் என்பவர்கள் 1916 ஆம் ஆண்டில் மந்த வாயு எலக்ட்ரான் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு அணுக்களின் வேதிச் சேர்க்கைகளுக்கான கொள்கையை முன்மொழிந்தனர். மந்த வாயு அணுக்கள் முழுவதும் நிரம்பி இணைதிறன் கூட்டிப் பெற்றுள்ளது. இணைத்திரன் கூட்டில் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றிருப்பதால் அவை எலக்ட்ரான்களை இழக்கும் அல்லது ஏற்கும் தன்மையைப் பெற்றிருப்பதில்லை. |
|