InterviewSolution
Saved Bookmarks
| 1. |
வெண்மைப்புரட்சி பற்றி குறிப்பு எழுதுக. |
|
Answer» வெண்மைப் புரட்சி என்பது இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகம் 1970 ல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் புதிய மேம்படுத்தப்பட்ட கால்நடைகளைப் பயன்படுத்தி அதிக பால் உற்பத்தியைப் பெருக்குவதாகும். தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகத்தின் தலைவராக இருந்த டாக்டர். வர்கீஸ் குரியன் இதை நிறுவினார். இதனால் இவர் வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். |
|