ஆரம்ப காலத்தில் மக்கள் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்து வந்தனர். அப்படி வாழ்ந்த காலத்தில் ஆநிரைகளை அதாவது மாடுகளைத் தன் சொத்தாக கருதி காத்து வந்தனர்.
இப்படி ஒரு குழுவினரிடம் இருக்கக்கூடிய மாடுகளை மற்றொரு குழுவினர் கைப்பற்றக்கூடிய அதாவது கவரக்கூடிய வழக்கம் அவர்களிடையே இருந்து வந்தது. இப்படி மற்ற குழுவினரின் உடைய மாடுகளை கவர்ந்து வருவதற்காக கவர்ந்து வர வெட்சிப் பூவினை சூடிக் கொண்டு செல்வர்.
எனவே இதனை வெட்சித்திணை என்பர். இப்படி ஆநிரைகள் என்று சொல்லப்படக்கூடிய மாடுகளை கவர்வதற்காக வெட்சிப் பூவினை சூடிக் கொண்டு செல்வதற்கு அதாவது வெட்சிப் பூவை சுடுவதற்கு வெட்சித்திணை என்பர்.