|
Answer» வினா விடையறியும் கருவி செயல்படும் விதம் - மனிதர்கள் பேச இயற்கையாக பயன்படுத்தப்படும் மொழிகள் இயற்கை மொழிகள் என அழைக்கப்படுகிறது. தமிழ் மொழி உள்ளிட்ட அனைத்து இயற்கை மொழிகளில் கேட்கப்படும் கேள்விகளை முதலில் ஆராய்ந்து அந்த கேள்விக்கு உரிய தகவலை திரட்டி சரியான பதிலினை அளிக்கும் ஒரு தானியங்கி கருவி வினா விடையறியும் கருவி என அழைக்கப்படுகிறது. இந்த தானியங்கி கருவி உள்ளீடாக கேட்கப்படும் கேள்விக்கு தேவையான தகவலை முதலிலேயே தீர்மானிக்கும். இதனால் கேட்கப்படும் கேள்விக்கு தேவையான தகவலை கண்டுபிடித்து, அதனை பிரித்து எடுத்து, அதன் பின் சரியான ஒரு பதிலினை உருவாக்கி, அதனை கேள்வியின் தேவைக்கு ஏற்ப பதிலளிக்க இயலும்.
|