Answer» உயிரூட்ட சத்தேற்றம்- மனித உடலில் ஏற்படும் நோய்களுக்கு காரணமாக இருப்பது உணவில் தேவையான அளவு ஊட்டச்சத்து மற்றும் புரதம் இல்லாமல் இருப்பதாகும்.
- மனிதர்களில் மட்டுமல்லாது விலங்குகளிலும் நோய் ஏற்பட இவையே காரணமாகின்றன.
- எனவே ஊட்டச்சத்து, கனிமங்கள், புரதங்கள் நிறைந்த பயிர் வகைகளை கண்டறிந்து பயிரிடப்படுகிறது.
- உணவூட்ட பொருட்களின் அளவு மற்றும் தரத்தை பொருத்து பயிர் ரகங்கள் புரதத்தின் அளவு மற்றும் தரம், எண்ணெயின் அளவு, கனிமங்களின் அளவு என பிரிக்கப்படுகிறது.
- எடுத்துக்காட்டாக புரதம் செறிந்த பயிர் வகையான அட்லஸ் 66, இரும்புசத்து செறிவூட்டப்பட்ட தாவரங்கள், வைட்டமின்கள் நிறைந்த கேரட், கீரை வகைகள் பயிரிடப்படுகின்றன.
- இவ்வாறு விரும்பத்தக்க ஊட்டச்சத்து நிறைந்த பயிர்த் தாவரங்களை உற்பத்திச் செய்யும் அறிவியல் முறை உயிரூட்ட சத்தேற்றம் எனப்படும்.
|