InterviewSolution
| 1. |
வராகன் (பகோடா) என்றால் என்ன? |
|
Answer» (பகோடா)விஜய நகர அரசர்களின் ஆட்சிக் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தங்க நாணயம் பகோடா என அழைக்கப்பட்டது.இந்தியாவிற்கு ஐரோப்பிய வணிகர்கள் வந்த கால கட்டத்தில் பகோடா என்ற நாணயங்கள் செல்வாக்கு பெற்று விளங்கியதாக கூறப்படுகிறது. மைசூரில் திப்பு சுல்தானின் ஆட்சியின் போது ஒரு பகோடாவின் மதிப்பு மூன்றரை (3½) ரூபாய்க்குச் சமமானதாக கருதப்பட்டது.இங்கிலாந்து மக்களிடையே பகோடா மரத்தை உலுக்குதல் என்ற சொலவடை நிலவி வந்தது.இந்த சொலவடை இந்தியாவில் ஒருவரை அதிர்ஷ்டசாலி ஆக்கும் வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன என்ற ஐரோப்பியர்களின் அக்கால மனநிலையை நமக்கு உணர்த்துவதாக உள்ளது. பகோடா வகை நாணயங்கள் தமிழில் வராகன் என அழைக்கப்படுகிறது. |
|