InterviewSolution
| 1. |
வரிக்கொண்ட மற்றும் வரிஅற்ற திசுக்கள்எபிதீலிய திசுவின் வகைகளாகும். |
|
Answer» ண்ட மற்றும் வரிஅற்ற திசுக்கள்எபிதீலிய திசுவின் வகைகளாகும்.மேலே உள்ள வாக்கியம் தவறு. வரிக்கொண்ட மற்றும் வரிஅற்ற திசுக்கள் தசைகளின் வகைகளாகும் எலும்புச்சட்டக தசை அல்லது வரித்தசை இவை எலும்புகளுடன் ஒட்டி காணப்படுகின்றன. இவை உடலின் அசைவிற்கு காரணமாக உள்ளன. எனவே இவை எலும்புச்சட்டக தசை அல்லது வரித்தசை என அழைக்கப்படுகிறது. இவை இயக்க தன்னிச்சை தசைகள் எனவும் அழைக்கப்படுகிறது. மென் தசை அல்லது வரியற்ற தசை இந்த தசை கதிர் வடிவில் மையப்பகுதி அகன்றும் முனைகள் குறுகியும் காணப்படும். இதன் மையத்தில் ஒரே ஒரு உட்கரு உள்ளது. இத்தசை நார்கள் எந்தவித கோடுகளையோ அல்லது வரிகளையோ பெறவில்லை. எனவே இவை மென் தசை அல்லது வரியற்ற தசை என அழைக்கப்படுகிறது. இவை இயக்கு (தன்னிச்சையற்ற) தசைகள் என அழைக்கப்படுகிறது. |
|