| 1. |
பொது மொழிகளைத் தனியே எடுத்து எழுதுக |
|
Answer» தேவைகள் என்ற நூலைப் படிக்கும் முன்... தமிழ் மொழியைக் காக்க என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி என்னுள் எழுந்த போது, அதற்காகச் சிந்தித்து, எதையெல்லாம் செய்தால் தமிழ் நீடிக்கும் என்ற வகையில் பல முடிவுகளை எடுத்து ஒரு கட்டுரை எழுதினேன். ஆனால், அக்கட்டுரையில் நான் குறிப்பிட்டிருந்த கருத்துக்களுக்கு தடையாக பல எதிர்க் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், அவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே, அக்கருத்துக்கள் தவறானவை என்ற நிலையில், உண்மையில் நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் வேறு என்பதை நிலை நாட்டும் விதத்தில், பல கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாகவே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இத் தகவலை மனதில் வைத்து, இதற்குக் கீழே உள்ள நூலைப் படிக்கவும்.வையகத்தில் இது வரை வழக்கில் இருந்த மற்றும் தற்காலத்தில் வழக்கில் உள்ள மொழிகள் அனைத்திலும் தமிழ் தான் மூத்த மொழி என்பதும், அதன் வளமும், இலக்கியச்செறிவும், போற்றுதற்குரியவை என்பதும், மனிதனுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவதில் மிக அதிக பங்களிப்பை நல்கிய மொழி தமிழ் மட்டுமே என்பதும் யாவரும் அறிந்ததே! ஒரு மொழிக்கு எத்தனை சிறப்புக்கள் இருந்தாலும், அச் சிறப்புக்கள், அம் மொழி மக்களால் பேசப்படும் பொழுது மட்டுமே மிளிருகின்றன. சிறப்புக்கள் மிக்க இருந்தும், ஒரு மொழி மக்களால் பேசப்படாத பொழுது, அச்சிறப்புக்களால் என்ன பயன்? இலத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் கூட சிறப்புக்கள் மிக்க மொழிகள் தான்! ஆனால், இன்றைய நாள்களில் அவை புழக்கத்தில் இல்லை.மொழி குறித்த சரியான விழிப்புணர்வு தொடக்கத்திலேயே இருந்திருக்குமேயானால் மொழிகள் அனைத்தும் காக்கப் பட்டிருக்கும்; தமிழர்களிடையே கூட சரியான நேரத்தில் சரியான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் தான் தமிழ் இது வரை புழக்கத்தில் இருக்கிறது என்றெல்லாம் சொல்வதைவிட தமிழ் ஒரு உன்னத மொழி என்பதாலேயே இன்றும் பயன் தருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.இலத்தீன், கிரேக்கம் போன்ற மொழிகள் ஆங்கிலத்தில் கலந்து விட்டன; சமஸ்கிருதம் சமய, ஆகமக் கல்விகளில் மட்டும் வழங்கப்படுகிறது. கருனாடகத்தில் உள்ள ஒரு சிற்றூரில் மட்டும் சமஸ்கிருதம் பேசப்படுகிறது. மொழிகள் எவராலும் பேசப்படவில்லை எனும் பொழுது, அவை எப்பொழுதோ மக்களுக்கு பெரிய அளவில் பயன் அளித்தன என்பதற்காகப் போற்றுதலுக்குரியவையே அன்றி, அம் மொழிகளாலும், அவற்றின் சிறப்புக்களாலும் எப் பயனும் இல்லை. ஆனால் தமிழ் போற்றுதலுக்குரியது மட்டுமின்றி, பயன் அளிக்கவல்லதுமாகும் என்ற நிலையைத் தக்க வைத்துக் கொள்ள, நாம் சில பணிகளை உடனடியாகப் போர்கால அடிப்படையில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் மற்றும் கடமையில் உள்ளோம். தமிழை வாழ்விக்க வேண்டியது தமிழின் தேவை அல்ல; அது தமிழனின் தேவை, தமிழனின் கடமையுமாகும் என்பதை இத் தருணத்தில் தமிழர்களாகிய நாம் அனைவரும் உணரவேண்டும். |
|